< Back
மாநில செய்திகள்
நீரோடைகளில் தண்ணீர் வரத்து குறைந்தது
விருதுநகர்
மாநில செய்திகள்

நீரோடைகளில் தண்ணீர் வரத்து குறைந்தது

தினத்தந்தி
|
13 April 2023 12:15 AM IST

நீரோடைகளில் தண்ணீர் வரத்து குறைந்தது.

ஸ்ரீவில்லிபுத்தூர்.

ஸ்ரீவில்லிபுத்தூருக்கு மேற்கே மேற்கு தொடர்ச்சி மலை உள்ளது. இங்கு உள்ள மலைப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்ததால் தண்ணீர் வரத்து ஓடைகளில் பெருக்கெடுத்து கண்மாய் மற்றும் குளங்களுக்கு தண்ணீர் வருவது வழக்கம். தற்போது கோடை வெயில் அளவுக்கு அதிகமாக இருப்பதாலும், மழை இல்லாததால் மலைப்பகுதிகளில் உள்ள ஓடைகளில் நீர் வரத்து குறைந்துள்ளது.

மலையில் உள்ள ஓடை பகுதியில் தண்ணீர் வரத்து இருந்தால் வனவிலங்குகள் மலை அடிவாரப் பகுதிக்கு வருவது குறையும், தண்ணீர் வரத்து குறைந்தால் தண்ணீர் குடிப்பதற்கு வனவிலங்குகள் மலை அடிவாரப் பகுதியை நோக்கி படையெடுக்கும். இதனால் விவசாயம் பெருமளவு பாதிக்கும். இதன் காரணமாக விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

மேலும் செய்திகள்