< Back
மாநில செய்திகள்
தேனி
மாநில செய்திகள்
தடுப்பணையில் ஆர்ப்பரித்து கொட்டிய தண்ணீர்
|16 Oct 2023 12:15 AM IST
போடி அருகே பிள்ளையார் தடுப்பணையில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள கொட்டகுடி, குரங்கணி, பிச்சாங்கரை போடிமெட்டு பகுதிகளில் கடந்த சில நாட்களாக பரவலாக கனமழை பெய்து வருகிறது. இதனால் ஆறு, அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. அதன்படி, போடி அருகே உள்ள கொட்டக்குடி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் பிள்ளையார் தடுப்பணையில் தண்ணீர் அருவிபோல் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
மேலும் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் செடி, கொடிகள் தண்ணீரில் அடித்து வரப்பட்டன. தொடர்ந்து மழை பெய்து வருவதால் பிள்ளையார் தடுப்பணையில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் நேற்று விடுமுறை தினம் என்பதால் பள்ளி மாணவர்கள் ஆபத்து உணராமல் ஆற்றில் குளித்து மகிழ்கின்றனர். எனவே அந்த பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.