< Back
மாநில செய்திகள்
மேட்டூர் அணையில் நீர் திறப்பு 95,000 கன அடியாக அதிகரிப்பு
மாநில செய்திகள்

மேட்டூர் அணையில் நீர் திறப்பு 95,000 கன அடியாக அதிகரிப்பு

தினத்தந்தி
|
27 Aug 2022 10:44 PM IST

நீர்திறப்பு அதிகரிக்கப்பட்ட நிலையில், கரையோர கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சேலம்,

மேட்டூர் அணை கடந்த ஜூலை 16-ந் தேதி முழு கொள்ளளவை (120 அடி உயரம்) எட்டி நிரம்பியது. இதனால் அணைக்கு வரும் 23 ஆயிரம் கனஅடி தண்ணீர் அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது. கடந்த 17-ந் தேதி அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 23 ஆயிரம் கனஅடிக்கு கீழ் குறைந்ததால் 16 கண் மதகுகள் வழியாக தண்ணீர் திறப்பது நிறுத்தப்பட்டது.

இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வந்தது. நேற்று மாலை 6 மணிக்கு வினாடிக்கு 23 ஆயிரம் கனஅடியாகவும், இரவு 8 மணிக்கு வினாடிக்கு 30 ஆயிரம் கனஅடியாகவும் அதிகரித்தது.

இதனை தொடர்ந்து மேட்டூர் அணையில் நீர் திறப்பு 80,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டது. இந்நிலையில் அணையில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருவதால், நீர் திறப்பு 95,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கரையோர கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்