< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
மேட்டூர் அணையில் நீர்திறப்பு 1.65 லட்சம் கன அடியாக அதிகரிப்பு
|31 Aug 2022 10:27 PM IST
அணைக்கான நீர்வரத்து 2 லட்சத்து 12 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்படக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சேலம்,
மேட்டூர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியாக பெய்து வரும் கனமழையின் காரணமாக அணைக்கு வரும் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் அணையின் பாதுகாப்பு கருதி, அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது.
தற்போது மேட்டூர் அணையில் இருந்து 1 லட்சத்து 65 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணைக்கான நீர்வரத்து 1 லட்சத்து 85 ஆயிரம் கன அடியாக உள்ள நிலையில், அது 2 லட்சத்து 12 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்படக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் காவிரி கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.