பவானிசாகர் அணையிலிருந்து நாளை முதல் தண்ணீர் திறப்பு
|பவானிசாகர் அணையிலிருந்து நாளை முதல் தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
2024- 2025 ஆம் ஆண்டு முதல்போக பாசனத்திற்கு, ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையிலிருந்து காலிங்கராயன் வாய்க்காலிலுள்ள பாசன நிலங்கள் பயன் பெறும் வகையில் நாளை (12.07.2024) முதல் (08.11.2024) வரை 120 நாட்களுக்கு, 5,184.00 மில்லியன் கனஅடிக்கு மிகாமல், தண்ணீர் திறந்து விட அரசு ஆணையிட்டுள்ளது. இதனால் ஈரோடு மாவட்டம், பவானி, ஈரோடு, மொடக்குறிச்சி மற்றும் கொடுமுடி ஆகிய வட்டங்களிலுள்ள 15,743 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.
2024 2025-ஆம் ஆண்டு முதல் போக பாசனத்திற்கு ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையிலிருந்து அரக்கன்கோட்டை மற்றும் தடப்பள்ளி வாய்க்கால்களிலுள்ள பாசன நிலங்களுக்கு நாளை (12.07.2024 முதல் 08.11.2024) வரை 120 நாட்களுக்கு 8,812.80 மில்லியன் கன அடிக்கு மிகாமல், தண்ணீர் திறந்துவிட அரசு ஆணையிட்டுள்ளது. இதனால், ஈரோடு மாவட்டத்திலுள்ள கோபிசெட்டிபாளையம், அந்தியூர் மற்றும் பவானி வட்டத்திலுள்ள 24,504 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.