< Back
மாநில செய்திகள்
நாமக்கல்
மாநில செய்திகள்
நகராட்சியுடன் இணைக்கப்பட்ட பகுதியில்கட்டணம் செலுத்தாத குடிநீர் இணைப்புகள் துண்டிப்புஆணையாளர் அறிவிப்பு
|13 July 2023 12:30 AM IST
நாமக்கல் நகராட்சி ஆணையாளர் சென்னுகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
நாமக்கல் நகராட்சியுடன் இணைக்கப்பட்ட பகுதிகளுக்கு புதிய குடிநீர் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட குடிநீர் இணைப்புகளுக்கான டெபாசிட் தொகை, மேற்பார்வை கட்டணம் மற்றும் சாலை பராமரிப்பு கட்டணம் ஆகியவற்றை உடனடியாக நகராட்சி அலுவலக கருவூலத்தில் செலுத்த வேண்டும். டெபாசிட் தொகை செலுத்தியவர்கள் மேற்பார்வை கட்டணம் மற்றும் சாலை பராமரிப்பு கட்டணத்தை மட்டும் உடனடியாக செலுத்த வேண்டும்.
உரிய கட்டணங்கள் செலுத்த தவறும்பட்சத்தில் எந்தவித முன் அறிவிப்பும் இன்றி குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறி உள்ளார்.