< Back
மாநில செய்திகள்
முல்லைப் பெரியாற்றில் கரைபுரண்டு ஓடும் தண்ணீர் - விவசாயிகள் மகிழ்ச்சி
மாநில செய்திகள்

முல்லைப் பெரியாற்றில் கரைபுரண்டு ஓடும் தண்ணீர் - விவசாயிகள் மகிழ்ச்சி

தினத்தந்தி
|
7 Aug 2022 3:00 PM IST

முல்லைப் பெரியாற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

கம்பம்,

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து வருவதால் முல்லைப் பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அதன்படி அணையின் நீர்மட்டம் இன்று 138. 25 அடியாக உயர்ந்தது. மேலும் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 5 ஆயிரத்து 27 கன அடியாக உள்ளது.

நீர் வெளியேற்றம் 2 ஆயிரத்து 122 அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. மேலும் கம்பம் மட்டும் சுற்று வட்டார பகுதிகளிலும் மழை பெய்து வருவதால் முல்லைப் பெரியாற்றின் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் முல்லைப் பெரியாற்றில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கின்றன. ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

மேலும் செய்திகள்