< Back
மாநில செய்திகள்
வைகை அணையில் இருந்து வரும் 26-ம் தேதி தண்ணீர் திறப்பு? - பொதுப்பணித்துறை அதிகாரிகள் தகவல்
மாநில செய்திகள்

வைகை அணையில் இருந்து வரும் 26-ம் தேதி தண்ணீர் திறப்பு? - பொதுப்பணித்துறை அதிகாரிகள் தகவல்

தினத்தந்தி
|
22 Aug 2022 9:29 AM GMT

மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கண்மாய்களில் நீரை பெருக்கும் வகையில் வைகை அணையில் இருந்து வருகிற 26-ந்தேதி முதல் ஒருவாரத்திற்கு தண்ணீர் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஆண்டிப்பட்டி,

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே 71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் தற்போது 70 அடியாக உள்ளது. வைகை அணையில் இருந்து ஏற்கனவே மதுரை திண்டுக்கல் மாவட்ட முதல் போக பாசனத்திற்காக தண்ணீர் திறக்கபட்டு வருகிறது.

இந்த நிலையில் மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் வைகை பூர்வீக பாசன பகுதி 1,2,3ஐ சேர்ந்த விவசாயிகள் விவசாயிகள் அந்த பகுதியில் உள்ள கண்மாய்களில் தண்ணீரை பெருக்கி வைக்கும் வைகையில் வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்க தமிழக அரசிற்கு கோரிக்கை விடுத்துள்ளனர். விவசாயிகள் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட அரசு வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்க முடிவு செய்துள்ளது.

அதன்படி வருகிற 26-ந்தேதி முதல் ஒருவாரத்திற்கு வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட உள்ளது. இந்த நிலையில் வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பதற்கான உத்தரவு ஓரிரு நாட்களில் தமிழக அரசு வழங்கும் என்றும், தண்ணீர் திறப்பதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்