< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
பாபநாசம் காரையார் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
|3 Jun 2022 3:53 PM IST
மழை பருவ சாகுபடிக்காக பாபநாசம் காரையார் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
நெல்லை,
நெல்லை மாவட்டம் பாபநாசம் காரையார் அணையில் இருந்து மழை பருவ சாகுபடிக்காக இன்று தண்ணீர் திறந்து விடப்பட்டது. நெல்லை கலெக்டர் விஷ்ணு முன்னிலையில், சபாநாயகர் அப்பாவு இன்று பாபநாசம் காரையார் அணையின் மதகுகளை இயக்கி தண்ணீர் திறந்து விட்டார்.
இதில் அம்பை அதிமுக எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா, முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அணையின் நீர் இருப்பு மற்றும் நீர்வரத்தைப் பொறுத்து தேவைக்கேற்ப தண்ணீர் திறந்து விடப்படும் என்றும் இதன் மூலம் நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 32,815 ஏக்கர் விவசாய நிலங்கள் பயனடையும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.