< Back
மாநில செய்திகள்
பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு
கிருஷ்ணகிரி
மாநில செய்திகள்

பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு

தினத்தந்தி
|
11 March 2023 12:15 AM IST

மத்தூர் அருகே 2 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பயன்பெறும் வகையில் பெனுகொண்டாபுரம் பெரிய ஏரியில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது.

மத்தூர்

மத்தூர் அருகே 2 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பயன்பெறும் வகையில் பெனுகொண்டாபுரம் பெரிய ஏரியில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது.

பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு

மத்தூர் அருகே உள்ள பெனுகொண்டாபுரம் பெரிய ஏரி சுமார் 240 ஹெக்டர் பரப்பளவு கொண்டது. இந்த ஏரியில் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. பெனுகொண்டாபுரம் பாசன விவசாயிகள் சங்க தலைவர் சவுந்தரராஜன் தலைமையில் விவசாயிகள் பூஜை செய்தனர். அரூர் நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் ஆறுமுகம் மதகு வழியாக தண்ணீரை திறந்து வைத்தார்.

அப்போது கால்வாயில் விவசாயிகள் மலர்தூவி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இந்த நிகழ்ச்சியில் ஊத்தங்கரை உதவி பொறியாளர் ஜெயக்குமார், ஊர் முக்கிய பிரமுகர்கள் ரவி, ராஜா, பரமசிவம், பிரகாஷ், மீனவர் கூட்டுறவு சங்க தலைவர் சேகர் உள்பட விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.

2 ஆயிரம் ஏக்கர்

இந்த ஏரியில் இருந்து 120 நாட்களுக்கு பிரதான கால்வாயில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட உள்ளது. 5 நாட்களுக்கு தொடர்ச்சியாகவும், 3 நாட்கள் இடைவெளி விட்டும் பிரதான கால்வாயில் தண்ணீர் திறந்து விடப்படும். இதன் மூலம் ஒட்டப்பட்டி, கொடமாண்டபட்டி, கவுண்டனூர், வாலிப்பட்டி, அந்தேரிப்பட்டி ஊராட்சிகளுக்கு உட்பட்ட 2 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். விவசாயிகள் தணணீரை சிக்கனமாக பயன்படுத்தி அதிக மகசூல் பெற்று பயனடையலாம்.

மேலும் செய்திகள்