< Back
மாநில செய்திகள்
பாம்பாறு அணையில் இருந்து 2,000 கனஅடி தண்ணீர் திறப்பு
கிருஷ்ணகிரி
மாநில செய்திகள்

பாம்பாறு அணையில் இருந்து 2,000 கனஅடி தண்ணீர் திறப்பு

தினத்தந்தி
|
14 Nov 2022 12:15 AM IST

ஊத்தங்கரை அருகே பாம்பாறு அணையில் இருந்து 2,000 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

ஊத்தங்கரை:

ஊத்தங்கரை அருகே பாம்பாறு அணை உள்ளது. இந்த அணை மூலம் மூன்றம்பட்டி, பாவக்கல், கொண்டம்பட்டி, நடுப்பட்டி, நாய்க்கனூர், அத்திப்பாடி, கொண்டம்பட்டி, மிட்டப்பள்ளி, மாரம்பட்டி, நடுப்பட்டி போன்ற ஊராட்சிகள் மற்றும் கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களை சேர்ந்த சுமார் 4 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறும். மேலும் ஊத்தங்கரை பகுதியின் முக்கிய நீர் ஆதாரமாக பாம்பாறு அணை உள்ளது.

ஜவ்வாது மலை பகுதியில் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. தற்போது அணைக்கு வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. அணைக்கு வரும் தண்ணீர் முழுவதும் மதகுகள் வழியாக திறந்து விடப்பட்டுள்ளது. பாம்பாறு அணையில் இருந்து தென்பெண்ணை ஆற்றில் அதிக அளவில் தண்ணீர் செல்வதால் பொதுமக்கள் யாரும் ஆற்றில் இறங்கி குளிக்க வேண்டாம் என பொதுப்பணித்துறை மூலம் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

மேலும் செய்திகள்