< Back
மாநில செய்திகள்
பெட்ரோலுடன் கலந்து வந்த தண்ணீர்... பழுதாகி நின்ற வாகனங்கள்: வாகன ஓட்டிகள் போராட்டம்
மாநில செய்திகள்

பெட்ரோலுடன் கலந்து வந்த தண்ணீர்... பழுதாகி நின்ற வாகனங்கள்: வாகன ஓட்டிகள் போராட்டம்

தினத்தந்தி
|
26 Aug 2024 8:41 PM IST

கும்பகோணம் அருகே திருவலஞ்சுழியில் பெட்ரோல் பங்கில் பெட்ரோலுடன் தண்ணீர் கலந்து வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர்,

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே திருவலஞ்சுழியில் ஒரு பெட்ரோல் பங்க் உள்ளது. இந்த பெட்ரோல் பங்கில் பெட்ரோல் நிரப்பிவிட்டு சிறிது தூரம் சென்ற இருசக்கர வாகனங்கள் திடீரென பழுதாகி நின்றுள்ளது. காரணம் தெரியாமல் வாகன ஓட்டிகள் பலரும் தவித்துள்ளனர். அப்போது அவர்கள் அனைவரும் குறிப்பிட்ட அந்த பெட்ரோல் பங்கில் பெட்ரோல் நிரப்பியது தெரியவந்தது.

இதையடுத்து அந்த பெட்ரோல் பங்கிற்கு வந்த வாகன ஓட்டிகள் பாட்டிலில் பெட்ரோல் நிரப்புமாறு கூறியுள்ளனர். அப்போது பெட்ரோலில் தண்ணீர் கலந்திருந்தது தெரியவந்தது. இது குறித்து பெட்ரோல் பங்க் ஊழியர்களிடம் கேட்டதற்கு அவர்கள் முறையாக பதில் அளிக்கவில்லை. இதனால் வாகன ஓட்டிகள் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்ந்து வாகனங்களுடன் பங்கிலேயே வாகன ஓட்டிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து விரைந்து வந்த போலீசார், பெட்ரோலில் தண்ணீர் கலந்தது எப்படி என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.


மேலும் செய்திகள்