< Back
மாநில செய்திகள்
திருவாரூரில், தர்பூசணி விற்பனை மும்முரம்
திருவாரூர்
மாநில செய்திகள்

திருவாரூரில், தர்பூசணி விற்பனை மும்முரம்

தினத்தந்தி
|
17 Feb 2023 12:30 AM IST

திருவாரூரில், தர்பூசணி விற்பனை மும்முரமாக நடந்தது. ஒரு கிலோ தர்பூசணி ரூ.20-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

திருவாரூர்;

திருவாரூரில், தர்பூசணி விற்பனை மும்முரமாக நடந்தது. ஒரு கிலோ தர்பூசணி ரூ.20-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

பனிப்பொழிவு

திருவாரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கடந்த மாதம் (ஜனவரி) இறுதியில் தொடர் கனமழையால் நெற்பயிர்கள் சேதம் அடைந்தன. மழை நின்ற பிறகு கடும் பனிப்பொழிவு காணப்பட்டது. இதனால் பகலிலும் வாகனங்களில் முகப்பு விளக்குகளை எரியவிட்டு சென்றன. தற்போது கோடைக்காலம் தொடங்குவதற்கு முன்பே திருவாரூரில் வெயில் சுட்டெரிக்க தொடங்கி உள்ளது.இதனால் பொதுமக்கள் மதியம் வெளியில் செல்ல முடியாமல் வீடுகளில் முடங்கி கிடக்கின்றனர். பகலில் வாட்டி வதைக்கும் வெயிலின் தாக்கம் இரவிலும் காணப்படுகிறது. கத்திரி வெயில் எனும் அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்பே திருவாரூரில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. வெப்பத்தில் இருந்து மக்கள் தங்களை தற்காத்துக்கொள்ள இளநீர், தர்பூசணி, சர்பத், ஐஸ் மோர், கரும்பு ஜூஸ் உள்ளிட்ட குளிர்பானங்களை விரும்பி பருகி வருகின்றனர்.

தர்பூசணி வரத்து

திருவாரூர் பகுதிக்கு தற்போது தர்பூசணி வரத்து அதிகரித்துள்ளது. திருவாரூர் பழைய பஸ்நிலையம், மயிலாடுதுறை சாலை, திருத்துறைப்பூண்டி சாலை, மன்னார்குடி சாலை கும்பகோணம் சாலை உள்ளிட்ட நகரின் முக்கிய பகுதிகளில் தர்பூசணி விற்பனை அமோகமாக நடந்து வருகிறது. வெயிலின் தாக்கம் தாங்க முடியாமல் சாலையில் செல்வோர் தர்பூசணி பழங்களை அதிக அளவு வாங்கி செல்கின்றனர்.

விலை அதிகரிக்க வாய்ப்பு

இதுகுறித்து தர்பூசணி வியாபாரி ஒருவர் கூறியதாவது:-

திண்டிவனம் பகுதியில் இருந்து தர்பூசணி பழங்களை வாங்கிவிற்பனைக்காக கொண்டு வந்துள்ளோம். அவர்களிடம் இருந்து மொத்த விலைக்கு வாங்கி வந்து விற்பனை செய்கிறோம். சராசரியாக ஒரு பழம் 3 கிலோ முதல் 8 கிலோ வரை உள்ளது.ஒருகிலோ தர்பூசணி ரூ.20 வரை விற்பனையாகிறது. தற்போது சீசன் முன்கூட்டியே தொடங்கி விட்டதால் தர்பூசணியை பலரும் விரும்பி வாங்குகின்றனர். தற்போது விலை குறைவாக இருந்தாலும், வரும் நாட்களில் அதன் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்றனர்.

மேலும் செய்திகள்