< Back
மாநில செய்திகள்
தரைப்பாலத்தை மூழ்கடித்த தண்ணீர்
திண்டுக்கல்
மாநில செய்திகள்

தரைப்பாலத்தை மூழ்கடித்த தண்ணீர்

தினத்தந்தி
|
31 Aug 2022 11:27 PM IST

வேடசந்தூர் அருகே தரைப்பாலத்தை தண்ணீர் மூழ்கடித்தது

திண்டுக்கல்லில் கடந்த சில நாட்களாக பகலில் வெயில் கொளுத்துவதோடு, இரவில் மழை கொட்டி வருகிறது. ஆனால் இன்று காலையில் இருந்தே வானம் மேக மூட்டமாக காட்சி அளித்தது. இதனால் வெயிலின் தாக்கம் குறைவாகவே இருந்தது. இதற்கிடையே மாலை 4.45 மணிக்கு சாரல் மழை பெய்ய தொடங்கியது. அந்த மழை சுமார் 40 நிமிடங்கள் வரை நீடித்தது. அதன்பின்னரும் இரவில் விட்டு, விட்டு சாரல் மழை பெய்தபடி இருந்தது. இதனால் நாகல்நகர், நேருஜிநகர், ரவுண்டுரோடு, தாடிக்கொம்பு சாலை உள்ளிட்ட இடங்களில் மழைநீர் ஆறாக ஓடியது.

இதேபோல் வேடசந்தூர், எரியோடு, கோவிலூர், புதுரோடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று மாலையில் பலத்த மழை பெய்தது. இதனால் அப்பகுதிகளில் உள்ள ஓடைகளில் மழைநீர் காட்டாற்று வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது. வேடசந்தூரில் இருந்து கூம்பூர் வழியாக கரூர் செல்லும் சாலையில் வள்ளிபட்டி அருகே உள்ள தரைப்பாலத்தை மூழ்கடித்தபடி மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. அப்போது அந்த வழியாக காரில் திண்டுக்கல்லுக்கு வந்த கரூர் மாவட்டம் ஈச்சமலையை சேர்ந்த தொழிலாளர்கள் 7 ேபர் மழைநீரில் சிக்கி கொண்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு வந்த கூம்பூர் போலீசார் மற்றும் பொதுமக்கள் அவர்களை காப்பாற்றினர்.

மேலும் செய்திகள்