< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 4,288 கன அடியாக குறைந்தது
|22 Oct 2023 6:23 PM IST
இன்றைய நிலவரப்படி மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து 4,288 கன அடியாக குறைந்துள்ளது.
சேலம்,
சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள மேட்டுர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் அணைக்கு வரும் நீர்வரத்து அதிகரித்தது. இருப்பினும் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை எதிர்பார்த்த அளவு கைகொடுக்காததால், வடகிழக்கு பருவமழையின்போது மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்றைய நிலவரப்படி மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து 5,132 கன அடியில் இருந்து 4,288 கன அடியாக குறைந்துள்ளது. அதே சமயம் அணையின் நீர்மட்டம் 47.33 அடியில் இருந்து 47.86 அடியாக உயர்ந்துள்ளது. அணையில் தற்போது 16.49 டி.எம்.சி. அளவு நீர் இருப்பு உள்ளது. மேட்டூர் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக மட்டும் வினாடிக்கு 500 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.