< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு - நீர்வரத்து 14,500 கன அடியாக உயர்வு
|8 Nov 2023 8:11 PM IST
ஐந்தருவி, சினி அருவி, மெயின் அருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.
தர்மபுரி,
தமிழக காவிரி கரையோர எல்லை பகுதிகளான, அஞ்செட்டி, ஒகேனக்கல், நாட்றம்பாளையம் ஆகிய வனப்பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாக தமிழக-கர்நாடக எல்லைப் பகுதியான பிலிகுண்டுலு வழியாக வரும் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
இதனால் ஐந்தருவி, சினி அருவி, மெயின் அருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. இந்நிலையில் ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து மேலும் அதிகரித்துள்ளதால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 8,500 கன அடியாக இருந்த நீர்வரத்து, தற்போது 14,500 கன அடியாக உயர்ந்துள்ளது.