< Back
மாநில செய்திகள்
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து சரிவு
மாநில செய்திகள்

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து சரிவு

தினத்தந்தி
|
4 Sept 2022 1:32 AM IST

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 47 ஆயிரம் கன அடியாக சரிந்துள்ளது.

தர்மபுரி,

தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான அஞ்செட்டி, நாட்றாம்பாளையம், பிலிகுண்டுலு, கேரட்டி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையின் காரணமாக தொட்டபெல்லா ஆற்றில் நீர்வரத்து அதிகரித்தது. இதனால் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னார் 1 லட்சத்து 20 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து தற்போது 47 ஆயிரம் கன அடியாக சரிந்துள்ளது. எனினும் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை பெய்து வருவதால், நீர்வரத்து ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. இதன் காரணமாக சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல் வர தொடர்ந்து 9 நாட்களாக மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.

மேலும் செய்திகள்