< Back
மாநில செய்திகள்
அருவிகளில் தண்ணீர் கொட்டுகிறது
பெரம்பலூர்
மாநில செய்திகள்

அருவிகளில் தண்ணீர் கொட்டுகிறது

தினத்தந்தி
|
14 Aug 2023 1:04 AM IST

பெரம்பலூரில் மழை பெய்ததால் அருவிகளில் தண்ணீர் கொட்டுகிறது.

பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்தது. மேலும் மாவட்டத்தின் மேற்கு அரணாக விளங்கும் பச்சைமலையிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் மயிலூற்று அருவி, கோரையாறு உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் கொட்டுகிறது. மேலும் அருவிகளில் இருந்து தண்ணீர் நீர்நிலைகளுக்கு சென்று வருகிறது. இதே போல் விசுவக்குடி நீர்த்தேக்கத்திற்கும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளன.

மேலும் செய்திகள்