< Back
மாநில செய்திகள்
திண்டுக்கல்
மாநில செய்திகள்
பழனி முருகன் கோவிலில் பக்தர்களுக்கு நீர்மோர்
|22 Feb 2023 12:15 AM IST
பழனி முருகன் கோவிலில் வெயிலின் தாக்கத்தை தணிக்க பக்தர்களுக்கு நீர்மோர் வழங்கப்படுகிறது.
முருகப்பெருமானின் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா நிறைவடைந்த பின்னரும் ஏராளமான பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர். அவர்கள் படிப்பாதை, யானைப்பாதை, ரோப்கார் மற்றும் மின்இழுவை ரெயில் மூலம் மலைக்கோவிலுக்கு செல்கின்றனர். இதில் பனிக்காலம் என்பதால் கடந்த நவம்பர் மாதத்தில் இருந்து படிப்பாதை வழியாக செல்லும் பக்தர்களுக்கு இடும்பர் சன்னதி அருகே கோவில் நிா்வாகம் சார்பில் சுக்கு காபி வழங்கப்பட்டது. தற்போது பனிக்காலம் நிறைவடைந்து, வெயில் காலம் தொடங்கி இருப்பதால் பக்தர்களுக்கு தினமும் நீர்மோர் வழங்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி நேற்று முதல் பக்தர்களுக்கு இலவசமாக நீர்மோர் வழங்கப்பட்டு வருகிறது. பக்தர் ஒருவருக்கு தலா 200 மில்லி வீதம் நீர்மோர் வழங்கப்படுகிறது. இதனை பக்தர்கள் ஆனந்தமுடன் வாங்கி பருகி செல்கின்றனர்.