< Back
மாநில செய்திகள்
புழல் ஏரிக்கு நீர்வரத்து 189 கன அடியாக சரிவு; உபரிநீர் திறப்பு நிறுத்தம்
மாநில செய்திகள்

புழல் ஏரிக்கு நீர்வரத்து 189 கன அடியாக சரிவு; உபரிநீர் திறப்பு நிறுத்தம்

தினத்தந்தி
|
13 Dec 2023 3:11 AM IST

புழல் ஏரியின் நீர்மட்டம் 20.21 அடியாக உள்ளது.

சென்னை,

மிக்ஜம் புயல் காரணமாக ஏற்பட்ட கனமழை ஓய்ந்து ஏரிகளுக்கு நீர்வரத்து சரிந்த நிலையில், சென்னை புழல் ஏரியில் இருந்து வெளியேற்றப்பட்டு வந்த உபரிநீர் முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. மொத்தம் 21.2 அடி உயரம் கொண்ட புழல் ஏரியில் 20.21 அடி உயரத்திற்கு நீர்மட்டம் உள்ளது.

ஏரிக்கு வரும் நீர்வரத்து வினாடிக்கு 239 கன அடியில் இருந்து, 189 கன அடியாக சரிந்துள்ளது. சென்னையின் குடிநீர் தேவைக்காக 159 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. ஏரியின் பாதுகாப்பு கருதி கடந்த சில நாட்களாக உபரிநீர் திறக்கப்பட்டு வந்த நிலையில், நீர்வரத்து சரிந்ததால் உபரிநீர் திறப்பு முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது.



மேலும் செய்திகள்