< Back
மாநில செய்திகள்
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 55 ஆயிரம் கன அடியாக நீடிப்பு

கோப்புப்படம் 

மாநில செய்திகள்

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 55 ஆயிரம் கன அடியாக நீடிப்பு

தினத்தந்தி
|
4 Sept 2022 4:52 PM IST

கடந்த இரண்டு நாட்களாக நீர்வரத்து 55 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து இன்றும் 55 ஆயிரம் கன அடியாக நீடிக்கிறது.

சேலம்,

சேலம் மாவட்டம் மேட்டூர் அணைக்கு, கடந்த இரண்டு நாட்களாக நீர்வரத்து 55 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து இன்றும் 55 ஆயிரம் கன அடியாக நீடிக்கிறது.

அணை மின் நிலையம் மற்றும் சுரங்க மின் நிலையங்கள் வழியாக விநாடிக்கு 23 ஆயிரம் கன அடியும், உபரிநீர் போக்கியான 16 கண் மதகுகள் வழியாக 32 ஆயிரம்கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டு வருகிறது.

கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு விநாடிக்கு400 கன அடி தண்ணீர் திறக்கப் படுகிறது. நீர் இருப்பு 93.47டி.எம்.சியாக உள்ளது. அதே போல் ஒகேனக்கல்காவிரியில் நேற்று முன்தினம் மாலை விநாடிக்கு 50 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலையும் விநாடிக்கு 50 ஆயிரம் கன அடியாக நீடித்தது.

இந்நிலையில் நேற்று தமிழக நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கன மழையால் ஓகேனக்கல்லுக்கு நீர்வரத்து விநாடிக்கு 70 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. அங்குள்ள அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால், அருவிகளில் குளிக்கவும், பரிசல் சவாரி செய்யவும், மாவட்ட நிர்வாகத்தால் விதிக்கப்பட்ட தடை நீடிக்கிறது.

மேலும் செய்திகள்