< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 4 ஆயிரம் கன அடியாக சரிவு
|2 Aug 2023 10:06 AM IST
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 4 ஆயிரம் கன அடியாக குறைந்துள்ளது.
தர்மபுரி,
கர்நாடகா, கேரளா மாநிலங்களில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கனமழை பெய்ததன் காரணமாக கபினி, கே.ஆர்.எஸ். அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்ததால் 22 ஆயிரம் கனஅடி தண்ணீர் தமிழகத்திற்கு திறக்கப்பட்டது.
தற்போது காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பெய்த மழை குறைந்தது. இதனால் கபினி, கே.ஆர்.எஸ். ஆகிய இரு அணைகளில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் அளவு 3,983 கனஅடியாக குறைக்கப்பட்டது. இதனால் தர்மபுரி மாவட்டம், ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து சரிந்து காணப்பட்டது.
நேற்று மாலை 5 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை 6 மணி நிலவரப்படி 4 ஆயிரம் கனஅடியாக தண்ணீர் குறைந்து வந்தது. கர்நாடகா-தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து காவிரி ஆற்றில் வரும் நீரினை அளவீடு செய்து கண்காணித்து வருகின்றனர்.