< Back
மாநில செய்திகள்
ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து 8,300 கன அடியாக உயர்வு - சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்க வாய்ப்பு
மாநில செய்திகள்

ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து 8,300 கன அடியாக உயர்வு - சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்க வாய்ப்பு

தினத்தந்தி
|
3 May 2023 10:40 PM IST

தொடர் மழை காரணமாக ஒகேனக்கல் காவிரியில் தற்போது நீர்வரத்து 8,300 கன அடியாக உயர்ந்துள்ளது.

தருமபுரி,

கடந்த சில நாட்களாக தமிழகத்தின் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான அஞ்செட்டி, நாட்றாம்பாளையம், ஒகேனக்கல் வனப்பகுதி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்த மழையின் காரணமாக ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

அங்கு சுமார் 500 முதல் 800 கனஅடி நீர் மட்டுமே வந்து கொண்டிருந்த நிலையில், இன்று அதிகாலை 4,500 கன அடியாக நீர்வரத்து அதிரடியாக உயர்ந்தது. மேலும் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக நீர்வரத்து அதிகரித்து தற்போது ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து 8,300 கன அடியாக உயர்ந்துள்ளது.

கோடைக்கால விடுமுறையை முன்னிட்டு தற்போது ஒகேனக்கலுக்கு சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருகை தருகின்றனர். இந்நிலையில் நீர்வரத்து தொடர்ந்து உயர்ந்து வருவதால், அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்க வாய்ப்புள்ளது என்பது குறிப்பிடதக்கது.


மேலும் செய்திகள்