விருதுநகர்
வீட்டுக்குள் தண்ணீர் புகுந்தது
|நீர்வரத்து கால்வாயில் வரத்து அதிகரித்ததால் வீட்டுக்குள் தண்ணீர் புகுந்தது. திடீெரன சுவா் இடிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ஸ்ரீவில்லிபுத்தூர்,
நீர்வரத்து கால்வாயில் வரத்து அதிகரித்ததால் வீட்டுக்குள் தண்ணீர் புகுந்தது. திடீெரன சுவா் இடிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவிலாறு அணை
வத்திராயிருப்பு அருகே உள்ள கோவிலாறு அணையில் இருந்து விவசாயத்திற்காக கடந்த சில வாரங்களுக்கு முன்பு தண்ணீர் திறந்து விடப்பட்டது. அவ்வாறு திறந்து விடப்பட்ட தண்ணீர் பல்வேறு நீர்வரத்து கால்வாய் வழியாக நத்தம்பட்டி கண்மாய், வலையபட்டி கண்மாய், கொந்தவராயன், குளம் கண்மாய் உள்பட 30 கண்மாய்களுக்கு நீர்வரத்து பாதையின் வழியாக சென்று அடைகிறது.
அந்த வகையில் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள பாட்டக்குளம் சல்லிப்பட்டி கிராமத்தில் உள்ள தொண்டைமான் குளத்திற்கு தண்ணீர் வந்து சேர்ந்தது.
சுவர் இடிந்து விழுந்தது
அதிகாலை நேரத்தில் திடீரென நீர்வரத்து கால்வாயில் தண்ணீர் அதிகரித்தது. இதனால் கால்வாய் அருகில் குடியிருக்கும் முருகேஸ்வரி என்பவரது வீட்டுக்குள் தண்ணீர் புகுந்தது. அதிக அளவில் தண்ணீர் புகுந்ததால் வீட்டின் ஒரு பக்க சுவர் இடிந்து விழுந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்த வருவாய் ஆய்வாளர்கள் ரமேஷ், அனந்த கிருஷ்ணன், கிராம நிர்வாக அதிகாரி அழகுராஜ், உதவியாளர் செல்வி உள்பட வருவாய்த்துறையினர் விரைந்து சென்று வீட்டில் இருந்தவர்களை மீட்டு அந்த பகுதியில் உள்ள இ-சேவை மைய கட்டிடத்தில் தங்க வைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.