< Back
மாநில செய்திகள்
விடுபட்ட வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு
விருதுநகர்
மாநில செய்திகள்

விடுபட்ட வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு

தினத்தந்தி
|
18 Aug 2023 12:24 AM IST

ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் விடுபட்டு வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டு்ள்ளது.


ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் விடுபட்டு வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டு்ள்ளது.

ஜல் ஜீவன் திட்டம்

மத்திய அரசின் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் கிராம பஞ்சாயத்துகளில் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கும் பணி நடைபெற்று வந்தது. தற்போது பல்வேறு பஞ்சாயத்துகளில் இந்த பணி பாதியிலேயே கைவிடப்பட்ட நிலையில் பல வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்படாத நிலை உள்ளது.

மேலும் பொதுக்குழாய் இணைப்பும் துண்டிக்கப்பட்டு விட்ட நிலையில் குடிநீர் இணைப்பு கிடைக்காத மக்கள் குடிநீருக்கு அவதிப்படும் நிலை நிலவுகிறது.

நடவடிக்கை

ஒரு சிலர் லாரியில் வரும் குடிநீரை விலை கொடுத்து வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் குடிநீர் இணைப்புக்கு கூடுதலாக பண வசூல் செய்யப்பட்டுள்ளதாகவும் புகார் கூறப்படுகிறது.

இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி விடுபட்ட வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேச மக்கள் முன்னேற்ற கழக தலைவர் பரத்ராஜா மாவட்ட நிர்வாகத்திடம் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் செய்திகள்