< Back
மாநில செய்திகள்
கிருஷ்ணகிரி
மாநில செய்திகள்
ரூ.53¾ லட்சத்தில் குடிநீர் இணைப்பு திட்டம்
|5 March 2023 12:15 AM IST
கொண்டம்பட்டியில் ரூ.53¾ லட்சத்தில் குடிநீர் இணைப்பு திட்டத்தை ஒன்றியக்குழு தலைவர் திறந்து வைத்தார்.
ஊத்தங்கரை
ஊத்தங்கரை அருகே உள்ள கொண்டம்பட்டி ஊராட்சியில் ஊராட்சி மற்றும் ஒன்றிய பொது நிதியில் இருந்து ரூ.53.79 லட்சம் மதிப்பீட்டில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள், பைப்லைன்கள் மற்றும் குடிநீர் இணைப்புகளை ஒன்றிய குழு தலைவர் உஷாராணி குமரேசன் மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். இதில் ஊராட்சி மன்ற தலைவர் சத்தியவாணி ராஜா, தி.மு.க. நகர அவைத் தலைவர் தணிகை குமரன், துணை தலைவர் கிருஷ்ணமூர்த்தி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மாதேஷ், ஊராட்சி செயலாளர்கள் கிருபாகரன், கிருஷ்ணமூர்த்தி, ஒப்பந்ததாரர் பெருமாள்சாமி, முன்னாள் கவுன்சிலர் சத்யநாராயணமூர்த்தி, சாமிநாதன், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.