கள்ளக்குறிச்சி
தியாகதுருகத்தில் நீர்,மோர் பந்தல்
|நகர அ.தி.மு.க. சார்பில் தியாகதுருகத்தில் நீர்,மோர் பந்தல் மாவட்ட செயலாளர் குமரகுரு திறந்து வைத்தார்
தியாகதுருகம்
தியாகதுருகத்தில் புக்குளம் பஸ் நிறுத்தம் அருகே நகர அ.தி.மு.க. சார்பில் நீர், மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது. இதற்கு நகர செயலாளர் ஷியாம் சுந்தர் தலைமை தாங்கினார். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பிரபு, ஒன்றிய செயலாளர்கள் அய்யப்பா, நாகலூர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் ஜான்பாஷா, நகர துணை செயலாளர் கிருஷ்ணராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஜெயலலிதா பேரவை நகர செயலாளர் வேல் நம்பி வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளர் குமரகுரு கலந்துகொண்டு நீர், மோர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு இளநீர், தர்பூசணி, வெள்ளரிப்பிஞ்சு, மோர், கூழ் ஆகியவற்றை வழங்கினார். இதில் முன்னாள் நகர செயலாளர் சுப்பிரமணியன், நகர அவைத்தலைவர் அய்யம்பெருமாள், மாவட்ட மாணவர் அணி இணை செயலாளர் சதாசிவம், பொருளாளர் பாண்டு, மாவட்ட பிரதிநிதி வேலுமணி மற்றும் தொண்டர்கள் பலரும் கலந்து கொண்டனர்.