விழுப்புரம்
நீர், மோர் பந்தல்
|செஞ்சியில் நீர், மோர் பந்தலை அமைச்சர் மஸ்தான் திறந்து வைத்தார்.
செஞ்சி:
செஞ்சி நகர தி.மு.க. சார்பில் திண்டிவனம் சாலையில் நீர், மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு செஞ்சி நகர செயலாளர் காஜாநஜீர் தலைமை தாங்கினார். செஞ்சி ஒன்றியக்குழு தலைவர் விஜயகுமார், செஞ்சி பேரூராட்சி மன்ற தலைவர் மொக்தியார் மஸ்தான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு நீர், மோர் பந்தலை திறந்து வைத்து, பொதுமக்களுக்கு தர்பூசணி, இளநீர், வெள்ளக்காய் மற்றும் நீர், மோர் வழங்கினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட கவுன்சிலர் அரங்க ஏழுமலை, பொதுக்குழு உறுப்பினர் மணிவண்ணன், அரசு வக்கீல் தமிழ்செல்வி கர்ணன், மாவட்ட பிரதிநிதி சர்தார், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் ஜான்பாஷா, கார்த்திக், சங்கர், சீனிவாசன், நெடுஞ்செழியன், நூர்ஜகான், கோட்டைகுமார், முன்னாள் கவுன்சிலர் ஜெயா முனுசாமி, மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி ரிஸ்வான், சந்திரன், தொண்டர் அணி பாஷா, பாலகிருஷ்ணன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.