செங்கல்பட்டு
வண்டலூரில் தொழிற்சாலையில் இரும்பு கேட் விழுந்து காவலாளி சாவு
|வண்டலூரில் தொழிற்சாலையில் இரும்பு கேட் விழுந்து காவலாளி பரிதாபமாக இறந்தார்.
தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்தவர் மோகன் (வயது 62), இவர் மேற்கு தாம்பரம் சி.டி.ஓ காலனி பகுதியில் தங்கி வண்டலூரில் உள்ள தனியார் தொழிற்சாலையில் காவலாளியாக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை தொழிற்சாலைக்கு வந்த வாகனத்தை உள்ளே அனுப்புவதற்காக மோகன் இரும்பு கேட்டை திறக்கும் போது திடீரென எதிர்பாராத விதமாக மோகன் மீது விழுந்து.
அதில் பலத்த காயம் அடைந்த மோகன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அப்போது அங்கு பணியில் இருந்த மற்றொரு காவலாளி கோபாலகிருஷ்ணன் (வயது 48) படுகாயம் அடைந்தார். அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து தகவல் அறிந்த ஓட்டேரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கேட் எப்படி மோகன் மீது விழுந்தது? ஏற்கனவே கேட் பழுதடைந்து இருந்ததா? என்பது குறித்தும் மேலும் கேட் திறக்கும் போது கேட் திறந்து விட்டதாக நினைத்து தொழிற்சாலைக்கு உள்ளே நுழைந்த வாகனம் கேட் மீது மோதி அதன் பிறகு கேட் காவலாளி மீது விழுந்ததா? என்பது குறித்து அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து ஒட்டேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.