< Back
மாநில செய்திகள்
கண்காணிப்பு கோபுரத்தில் இருந்து தவறி விழுந்ததில் காவலாளி பலி
பெரம்பலூர்
மாநில செய்திகள்

கண்காணிப்பு கோபுரத்தில் இருந்து தவறி விழுந்ததில் காவலாளி பலி

தினத்தந்தி
|
9 Oct 2022 12:15 AM IST

கண்காணிப்பு கோபுரத்தில் இருந்து தவறி விழுந்ததில் காவலாளி பலியானார்.

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, டி.களத்தூர் தேவேந்திர குல வேளாளர் தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 42). இவர் அதே பகுதியில் உள்ள சோலார் மூலம் மின் உற்பத்தி செய்யும் தனியார் நிறுவனத்தில் கடந்த 2 ஆண்டுகளாக காவலாளியாக பணிபுரிந்து வந்தார். ராஜேந்திரன் நேற்று அதிகாலை பணியின் போது நிறுவனத்தில் உள்ள சுமார் 15 அடி உயரமுள்ள கண்காணிப்பு கோபுரத்தில் ஏறி, இறங்கும் போது தவறி கீழே விழுந்ததில் படுகாயமடைந்தார். இதனை கண்ட சக பணியாளர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே ராஜேந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக துறையூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்