< Back
மாநில செய்திகள்
குடிநீருடன் கலந்து வரும் கழிவு நீர்
விருதுநகர்
மாநில செய்திகள்

குடிநீருடன் கலந்து வரும் கழிவு நீர்

தினத்தந்தி
|
9 July 2023 1:30 AM IST

சிவகாசி அருகே போதிய வாருகால் வசதி இல்லாத நிலையில் குடிநீருடன், கழிவுநீர் கலந்து வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

சிவகாசி,

சிவகாசி அருகே போதிய வாருகால் வசதி இல்லாத நிலையில் குடிநீருடன், கழிவுநீர் கலந்து வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

வாருகால் வசதி

சிவகாசி மாநகராட்சியையொட்டி உள்ள பகுதி முனீஸ்வரன் காலனி. இங்குள்ள கிழக்குபகுதியில் கடந்த 20 ஆண்டுகளாக 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள்.

இந்தபகுதிக்கு போதிய வாருகால் வசதி இல்லாத நிலையில் அப்பகுதி மக்கள் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் தங்கள் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரை உறிஞ்சுகுழாய் அமைத்து பூமிக்குள் விட்டு வந்தனர். நாளடைவில் உறிஞ்சுகுழாய் நிரம்பி தண்ணீர் மேலே வர தொடங்கியது.

குடிநீருடன் கலப்பு

இந்த நிலையில் தங்கள் பகுதிக்கு வாருகால் வசதி வேண்டும் என்று அப்பகுதி மக்கள் பல முறை அதிகாரிகளிடம் மனு கொடுத்துள்ளனர். ஆனால் அந்த மனுக்கள் மீது இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதற்கிடையில் தற்போது அந்த பகுதியில் ஆழ்துளை கிணறு மூலம் தண்ணீர் எடுக்கும் போது அதில் கழிவுநீர் சேர்ந்து வருவதாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் அப்பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள வந்த யூனியன் துணைத்தலைவர் விவேகன்ராஜை நேரில் சந்தித்து பொது மக்கள் கோரிக்கை வைத்தனர்.

உடன் நடவடிக்கை

இதையடுத்து யூனியன் துணைத்தலைவர் விவேகன்ராஜ் உடனே பஞ்சாயத்து தலைவர் சக்திவேல் நாகராஜ், துணைத்தலைவர் நாகேந்திரன் மற்றும் அதிகாரிகளை அழைத்துக்கொண்டு அந்த பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார்.

பின்னர் அந்த பகுதிக்கு வாருகால் வசதி ஏற்படுத்தி தர திட்ட மதிப்பீடு தயார் செய்து கொடுக்கும் படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். உடன் நடவடிக்கை எடுத்த யூனியன் துணைத்தலைவருக்கு அப்பகுதி ஒன்றிய கவுன்சிலர் ரீட்டா ஆரோக்கியம் மற்றும் பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்