< Back
மாநில செய்திகள்
அரியலூர்
மாநில செய்திகள்
குழாயில் ஏற்பட்ட பழுதால் வீணாகும் குடிநீர்
|29 Jan 2023 1:03 AM IST
குழாயில் ஏற்பட்ட பழுதால் குடிநீர் வீணாகிறது.
தாமரைக்குளம்:
அரியலூர் ராஜாஜி நகரில் பி.எஸ்.என்.எல். நிறுவனம் அருகே கொள்ளிடம் குடிநீர் குழாயில் பழுது ஏற்பட்டு, குழாயில் இருந்து தண்ணீர் வெளியேறி வீணாக சாலையில் செல்கிறது. குழாயில் ஏற்பட்ட கசிவின் காரணமாக சாலையோரமாக ஓடைபோல் தண்ணீர் சென்று, சாக்கடையில் கலக்கிறது. கொள்ளிடம் குடிநீரானது திருமானூரில் இருந்து நீரேற்று நிலையம் வழியாக பல ஊர்களை கடந்து அரியலூர் வருகிறது. அவ்வாறு வரும் குடிநீர் வீணாவது பொதுமக்களை வேதனைப்பட செய்துள்ளது. எனவே உடனடியாக குடிநீர் குழாயில் ஏற்பட்ட பழுதை நீக்கி, குடிநீர் வீணாவதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.