ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் சாதி, இனம் பிளவுப்பட்டதா? - கவர்னர் கருத்துக்கு, கி.வீரமணி கண்டனம்
|ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் சாதி, இனம் பிளவுப்பட்டதா என்கிற கவர்னர் கருத்துக்கு, கி.வீரமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை,
திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:-
கவர்னர் என்பவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் அல்ல. மத்திய அரசால் மாநிலங்களுக்கு நியமிக்கப்பட்டு, அந்தந்த மக்களின் வரிப்பணத்தில் சம்பளம் வாங்கும் ஒரு அரசு ஊழியர். இந்திய அரசமைப்பு சட்டப்படி அவர் அந்த மாநிலத்தின் ஆளுமைக்கான ஒரு அடையாள முகம். கவர்னரின் ஆணைப்படி என்பது அரசமைப்பு சட்டப்படியான சம்பிரதாயம். அதன் உண்மையான ஆட்சி, ஜனநாயகத்தில் முதல்-அமைச்சரும், அவரது அமைச்சரவையுமே.
கடந்த 22-ந்தேதியன்று கவர்னர் மாளிகையில், நூல் வெளியீட்டு விழாவில் கவர்னர் பேசும்போது, 'ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் இந்தியா சாதி, இனம் என பிளவுப்பட்டுள்ளது' என்று பேசியிருப்பது இமலாயப்புரட்டு ஆகும். ஆங்கிலேயர் காலத்திலா சாதி, இனம் ஏற்பட்டது? இப்படிப்பட்ட பித்தலாட்டம் பேசுவது, அதுவும் கவர்னர் பதவியில் இருந்து பேசுவது தவறல்லவா?
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.