நெல்லை மாநகராட்சி ஆணையாளருக்கு பிடிவாரண்ட் - மாவட்ட நுகர்வோர் கோர்ட்டு உத்தரவு
|நெல்லை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் மேலப்பாளையம் மண்டல துணை ஆணையாளருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டார்.
நெல்லை,
நெல்லை மாநகராட்சி மேலப்பாளையம் மண்டலத்திற்கு உட்பட்ட தியாகராஜ நகர் பகுதியில் வசித்து வருபவர் ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியர் அழகு ரத்தினம். இவர் கடந்த 2016-ம் ஆண்டு தனது வீட்டிற்கு புதிய குடிநீர் இணைப்பு மற்றும் பாதாள சாக்கடை இணைப்பு கேட்டு மனு செய்துள்ளார்.
இதற்கான பணத்தை செலுத்திய பிறகும், தனது வீட்டிற்கு புதிய குடிநீர் இணைப்பு வழங்கப்படவில்லை எனக் கூறி தென்மாவட்ட நுகர்வோர் கோர்ட்டில் அழகு ரத்தினம் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில், பாதிக்கப்பட்ட நபர் கூடுதலாக செலுத்திய தொகையை திரும்ப செலுத்த கடந்த ஏப்ரல் மாதம் நுகர்வோர் கோர்ட்டு உத்தரவிட்டது.
இருப்பினும் இது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில், அழகு ரத்தினம் மீண்டும் நுகர்வோர் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, நெல்லை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் மேலப்பாளையம் மண்டல துணை ஆணையாளருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டார்.