< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
காவிரி கரையோர மாவட்டங்களுக்கு எச்சரிக்கை
|20 May 2022 2:15 PM IST
காவிரி கரையோர மாவட்டங்களான கிருஷ்ணகிரி, தருமபுரி உள்ளிட்ட பல்வேறு டெல்டா மாவட்ட கலெக்டர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சென்னை,
தொடர் மழை காரணமாக கர்நாடகவில் பல பகுதிகளில் பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளன. இந்நிலையில், கர்நாடகாவில் அணைகளிலிருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ள நிலையில் காவிரி கரையோர மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரிக்கலாம் என்பதால் போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சை நாகை என
9 மாவட்ட கலெக்டர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய நீர்வளத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் கேரளா, கர்நாடகாவில் கனமழையால் நாளை மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 46,000 கன அடியாக உயரலாம் என கூறியுள்ளது.