< Back
மாநில செய்திகள்
வார்டு குழு கூட்டம்
ராணிப்பேட்டை
மாநில செய்திகள்

வார்டு குழு கூட்டம்

தினத்தந்தி
|
16 Sept 2023 12:50 AM IST

திமிரி பேரூராட்சியில் வார்டு குழு கூட்டம் நடைபெற்றது.

திமிரி பேரூராட்சியில் வார்டு குழு கூட்டம் நடந்தது. பேரூராட்சி மன்ற தலைவர் மாலா இளஞ்செழியன் தலைமை தாங்கினார். செயல் அலுவலர் (பொறுப்பு) சரவணன் முன்னிலை வகித்தார். இளநிலை உதவியாளர் நவீன் குமார் வரவேற்றார். கூட்டத்தில் திமிரி பேரூராட்சியில் அம்ருத் 2.0 திட்டத்தின் கீழ் ரூ.20.42 லட்சத்தில் குடிநீர் வழங்குவதற்கான திட்டத்தை செயல்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும் பேரூராட்சிக்கு உட்பட்ட 15 வார்டுகளிலும் பொதுமக்களுக்கு தேவையான வளர்ச்சி திட்டம் குறித்து விவாதிக்கப்பட்டு, பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெறப்பட்ட, தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இதில் பேரூராட்சி மன்ற துணைத் தலைவர், வார்டு உறுப்பினர்கள், பேரூராட்சி ஊழியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், செவிலியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்