< Back
மாநில செய்திகள்
ஆரணி நகராட்சியில் வார்டு, வார்டாக காய்ச்சல் சிறப்பு முகாம்
திருவண்ணாமலை
மாநில செய்திகள்

ஆரணி நகராட்சியில் வார்டு, வார்டாக காய்ச்சல் சிறப்பு முகாம்

தினத்தந்தி
|
21 Oct 2023 1:16 PM GMT

ஆரணி நகராட்சியில் வார்டு, வார்டாக காய்ச்சல் சிறப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

ஆரணி

ஆரணி நகராட்சியில் வார்டு, வார்டாக காய்ச்சல் சிறப்பு முகாம நடத்தப்பட்டு வருகிறது.

தமிழகம் முழுவதும் பருவ மழை தொடங்கியுள்ள நிலையில் பருவமாற்றம் காரணமாக காய்ச்சல் ஏற்படுவதாகவும் கொசு தொல்லையாலம் காய்ச்சல் ஏற்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதனை தடுக்க ஆரணி நகராட்சி ஆணையாளர் கே.பி. குமரன் தலைமையில் நகரில் உள்ள 33 வார்டுகளிலும் காய்ச்சல் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதில் டாக்டர்கள், சுகாதார தனி அலுவலர் மோகனசுந்தரம், சுகாதார ஆய்வாளர் வடிவேல், சுகாதார களப்பணியாளர்கள், சுகாதார செவிலியர்கள் மற்றும் களப்பணியாளர்கள் வீடு வீடாகச் சென்று காய்ச்சல் உள்ளதா என கண்டறிந்து அவர்களுடைய உடலுக்கு ஏற்ப மருந்து மாத்திரைகள் மருத்து ஆலோசனைகளை வழங்கப்பட்டு வருகிறது. அது மட்டுமல்லாமல் மாலை நேரங்களில் புகை அடிக்கும் பணியும் நகராட்சி மூலம் நடத்தப்பட்டு வருகிறது.

மேலும் செய்திகள்