< Back
மாநில செய்திகள்
சச்சர் குழு அறிக்கையை வக்பு சட்டம் நடைமுறைப்படுத்துகிறது - அண்ணாமலை
மாநில செய்திகள்

சச்சர் குழு அறிக்கையை வக்பு சட்டம் நடைமுறைப்படுத்துகிறது - அண்ணாமலை

தினத்தந்தி
|
8 Aug 2024 9:11 PM IST

சச்சர் குழு அறிக்கையை வக்பு சட்டம் நடைமுறைப்படுத்துவதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

சென்னை,

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது;

வக்பு வாரிய சட்டம், 1954

"அசல் நில வழங்கல் ஆவணம் தொலைந்து போனாலும், ஒரு சொத்து நீண்ட காலமாக மதம் மற்றும் தொண்டு செய்யும் பணிகளுக்காக பயன்படுத்தப்பட்டு இருந்தால், அது வக்பு என்று கருதலாம் என்ற கருத்து அறிமுகப்படுத்தப்பட்டது.

வக்பு வாரிய சொத்துக்கள் தொடர்பான பிரச்சனைகளில் முடிவெடுக்க உரிமையியல் நீதிமன்றங்களுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டது.

வக்பு வாரிய கணக்கெடுப்புக்கான செலவை வக்பு வாரியத்தால் நியமிக்கப்பட்ட முத்தாவல்லி ஏற்க வேண்டும்; கணக்கெடுப்புகளுக்கான நிதி வக்பு வாரியத்தின் வருமானத்தில் இருந்து வழங்கப்படும்.

சட்டப்பிரிவு 27-ன் படி, உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடராத வரை, ஒரு சொத்து வக்பு வாரிய சொத்தா என்பதை ஆய்வு செய்து, தகவல்களை பெறவும், அதுகுறித்து இறுதி முடிவெடுக்கவும் வக்பு வாரியத்திற்கு அதிகாரம் வழங்கப்பட்டது.

வக்பு வாரிய சட்டம், 1995

வக்பு சொத்து என அறிவிக்கப்பட்ட இடங்களில், தற்போது எந்த பணிகள் நடந்தாலும் அதை கருத்தில் கொள்ளாமல் வக்பு சொத்தாகவே கருதப்படும்.

வக்பு சொத்துக்கள் தொடர்பான பிரச்சனைகளை தீர்ப்பதற்காக நிறுவப்பட்ட வக்பு தீர்ப்பாயங்களில் எடுக்கப்படும் இறுதி முடிவுகளுக்கு எதிராக உரிமையியல் நீதிமன்றங்களில் மேல்முறையீடு செய்ய முடியாது.

நியமனம் செய்யப்பட்ட முத்தாவல்லிகள், நிர்வாகக் குழுக்களின் உறுப்பினர்கள், நிர்வாக அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் அரசு ஊழியர்களாக வக்பு அலுவலகத்தில் பதவி பெற்று உள்ளனர்.

வக்பு வாரிய திருத்த சட்டம் 2013

முஸ்லீம் அல்லாதவர்களும் வக்புக்களை உருவாக்க அனுமதிக்கப்பட்டனர்.

வக்பு சொத்துகளை, குத்தகை பெற்றவர்கள் மற்றும் குத்தகைதாரர்களின் உரிமைகள் மற்றும் குடியிருப்பவர்களை வெளியேற்றுவது தொடர்பான விஷயங்களில் வக்பு தீர்ப்பாயங்கள் தீர்ப்பளிக்க வழிவகை செய்யப்பட்டது.

வக்பு சொத்துக்களை கணக்கெடுப்பதற்கு ஆகும் செலவு மாநில அரசின் செலவாக மாற்றப்பட்டது ஆவணங்கள் இல்லாமல் மத பயன்பாட்டிற்கான சான்றுகளின் அடிப்படையில் நிலத்தை வக்புவாக அறிவிக்க அனுமதிக்கப்பட்டன.

ஒரு சொத்து வக்பு சொத்தா என்பதை முடிவெடுக்கும் அதிகாரம் உட்பட பல்வேறு அதிகாரங்கள் வக்பு வாரியத்துக்கு வழங்கப்பட்டன.

இதன் முக்கிய பிரச்சினைகள்

ஒரு நிலத்தை பயன்பாட்டின் அடிப்படையில் வக்பு சொத்தாக அனுமதிப்பது, பொது சொத்து நிலங்களின் மீதான தவறான பயன்பாடு மற்றும் அங்கீகரிக்கப்படாத உரிமைகோரல்களின் அபாயத்தை உருவாக்கும்.

வக்பு வாரியத்திற்கு வழங்கப்பட்ட அதிகாரங்கள், விதிமீறல்கள் மற்றும் சர்ச்சைகளுக்கு வழிவகுக்கும்.

கணக்கெடுப்பு செலவுகளை மாநில அரசுக்கு மாற்றுவது மாநில அரசுகளின் மீது கூடுதல் நிதிச்சுமையை ஏற்படுத்துகிறது.

வக்பு தீர்ப்பாயங்களின் மேலான அதிகாரங்கள், மற்ற மதக் கொடைகளைப் பொறுத்த வரையில் நிலைத்தன்மை மற்றும் நியாயம் பற்றிய கேள்விகளை எழுப்புகின்றன.

வக்பு வாரிய அலுவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ள சலுகைகள் மற்ற மதம் சார்ந்த அமைப்புகளை பராமரிப்பவர்களுக்கு வழங்கப்படவில்லை.

அனைத்து வக்பு வாரிய சொத்துகளையும் ஆய்வு செய்து முடிவெடுக்கும் பொறுப்பு ஆட்சியர்களுக்கே வழங்கப்படுகிறது.

இஸ்லாமியர்கள் மட்டுமே வக்புகளை உருவாக்க முடியும்.

வக்பு வாரிய தீர்ப்பாயங்களில் நீதித்துறை மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த அதிகாரிகள் நியமிக்கப்படுவார்கள். '

வக்பு வாரியம் சார்ந்த வழக்குகளை 90 நாட்களில் பதிவு செய்து கோப்புகளில் இட வேண்டும். அதற்கான தீர்வு 6 மாதங்களில் வழங்கப்பட வேண்டும்.

வக்பு வாரிய நிலத்தை மதம், தொண்டு சார்ந்த பணிகளை மேற்கொள்ளவே பயன்படுத்த வேண்டும்.

வக்பு வாரியத்தில் வெளிப்படைத்தன்மையை கொண்டுவர தொழில்நுட்ப உதவியோடு பணிகள் மேற்கொள்ளப்படும்.

மத்திய மற்றும் மாநில வக்பு வாரியங்களில் பெண்களின் பிரதிநிதித்துவம் கொண்டுவரப்படும்.

இஸ்லாமிய மதத்தில் உள்ள அனைத்து சமூக மக்களுக்கும் வக்பு வாரியத்தில் பிரதிநிதித்துவம் வழங்கப்படும்.

வக்பு வாரியங்களை சிறப்பாக நடத்த நிர்வாக திறனுள்ள அதிகாரிகள் நியமிக்கப்படுவார்கள், வக்பு வாரியம் அமைந்துள்ள மாநிலத்தை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் இந்த நிர்வாக குழுவில் இடம் பெறுவர்.

இஸ்லாமிய ஏழை பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் கிடைக்கவேண்டிய சொத்துக்கள் பறிக்கப்படுவது முற்றிலும் தடுக்கப்படும்."

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்