< Back
மாநில செய்திகள்
தமிழில் பெயர் பலகை வைக்கக்கோரி போராட்டம்; 2 பேர் கைது
திருநெல்வேலி
மாநில செய்திகள்

தமிழில் பெயர் பலகை வைக்கக்கோரி போராட்டம்; 2 பேர் கைது

தினத்தந்தி
|
26 Oct 2023 12:56 AM IST

நெல்லையில் அரசு அலுவலகங்களில் தமிழில் பெயர் பலகை வைக்கக்கோரி போராட்டம் நடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

நெல்லை மாநகராட்சி பகுதிகளில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. அரசு அலுவலக கட்டிடங்களும் புதிதாக கட்டப்பட்டு வருகிறது. இந்த அரசு அலுவலகங்களில் தமிழில் பெயர் பலகை வைக்கக்கோரி, தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் வியனரசு தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்.

இந்தநிலையில் கோரிக்கையை வலியுறுத்தி, பாளையங்கோட்டை கே.டி.சி.நகர் பாலத்தின்கீழ் வியனரசு மற்றும் நாம் தமிழர் கட்சி நெல்லை தொகுதி செயலாளர் மாரிசங்கர் ஆகியோர் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை அறிந்த பாளையங்கோட்டை போலீசார், அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்