ரூ.1000 உரிமைத் தொகை வேண்டுமா... இது எல்லாம் அவசியம்?
|மகளிர் உரிமை தொகைக்கான விண்ணப்பத்தில் கேட்கப்படும் தகவல்கள் குறித்த விவரம் வெளியிடப்பட்டுள்ளது.
சென்னை,
மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை செயல்படுத்துவதற்காக அனைத்து மாவட்ட ஆட்சித்தலைவர்களுடன் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி வாயிலாக கலந்துகொள்ள உள்ளார். பல்வேறு அதிகாரிகளும் இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர்.
வருகிற செப்டம்பர் 15ந்தேதி முதல் இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வருகிறது. அதற்கு முன்னதாக பயனாளிகளை தேர்ந்தெடுக்க அனைத்து ரேஷன் கடை அருகிலும் சிறப்பு முகாம் நடத்துவது, உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
தகுதிவாய்ந்த பெண்களுக்கு உரிமைத்தொகை அவர்களுடைய வங்கிக்கணக்கில் செலுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். இந்தத் திட்டத்துக்கான சிறப்புப் பணி அதிகாரியாக இளம் பகவத் ஏற்கெனவே நியமிக்கப்பட்டுள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் மகளிர் உரிமை தொகைக்கான விண்ணப்பத்தில் கேட்கப்படும் தகவல்கள் குறித்த விவரம் வெளியிடப்பட்டுள்ளது.
குடும்ப அட்டை எண், ஆதார் எண், தொலைபேசி எண், புகைப்படம் கேட்கப்படுகிறது.
வயது, மாவட்டம், தொழில், வங்கி கணக்கு எண் குறித்த விவரங்கள் கேட்கப்படுகிறது.
வாடகை வீடா? சொந்த வீடா?, நிலம் வைத்திருப்பவரா? வாகனம் வைத்து உள்ளவரா ஆகிய விவரங்கள் கேட்கப்படுகிறது