< Back
மாநில செய்திகள்
நடைப்பயிற்சி செய்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
திருவாரூர்
மாநில செய்திகள்

நடைப்பயிற்சி செய்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

தினத்தந்தி
|
28 Aug 2023 12:15 AM IST

நடைப்பயிற்சி செய்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

திருவாரூரில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நடைபயிற்சி செய்தார்.. அப்போது அவர் பொதுமக்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்

நடைப்பயிற்சி

திருவாரூரில் நேற்று எம்.செல்வராஜ் எம்.பி. இல்ல திருமணம் நடந்தது. திருமணத்தை முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் நடத்தி வைத்தார். இந்த விழாவில் கலந்து கொள்ள திருவாரூருக்கு வந்த முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் சன்னதி தெருவில் உள்ள அவரது வீட்டில் இருந்து காலை நடைப்பயிற்சியை தொடங்கினார்.

புகைப்படம்

வீட்டில் இருந்து புறப்பட்டு வடக்கு வீதி வழியாக சென்று திருவாரூர் தியாகராஜர் கோவில், கமலாலயம் குளத்தின் 4 கரைகளை சுற்றி வந்து, எம்.எல்.ஏ. அலுவலகம், தெற்கு மட வளாகம் வழியாக மீண்டும் தனது வீட்டை வந்தடைந்தார்.

முதல்-அமைச்சர் நடைப்பயிற்சி மேற்கொண்ட போது வழிநெடுகிலும் பொதுமக்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். மாணவிகள் சிலர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் கைகுலுக்கி புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். மேலும் நகரில் தூய்மை பணியில் ஈடுபட்டிருந்த துப்புரவு பணியாளர்கள் முதல்-அமைச்சருக்கு வணக்கம் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்