< Back
மாநில செய்திகள்
ராணிப்பேட்டை
மாநில செய்திகள்
சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் நடைபயணம்
|5 Jun 2022 9:42 PM IST
அரக்கோணத்தில் சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் நடைபயணம் நடந்தது.
அரக்கோணம்
வரையறுக்கப்பட்ட ஊதியம், ஓய்வூதியம் உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரி தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் மாவட்ட செயலாளர் பரமசிவம் தலைமையில் தமிழக அரசிடம் நீதி கேட்டு நடைபயணம் போராட்டம் அரக்கோணம் தாலுகா அலுவலகம் அருகில் நடைபெற்றது. ஒன்றிய தலைவர் கிருபன்கீர்த்தி, செயலாளர் லட்சுமி, பொருளாளர் கோகிலா உள்ளிட்ட சத்துணவு பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர். போராட்டத்தில் அன்னமிட்ட கைகளை கிண்ணம் ஏந்த விடுவதா என கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.