மயிலாடுதுறை
கூழையாறு கடற்கரையில் காத்திருப்போர் மண்டபம் அமைப்பு
|கொள்ளிடம் அருகே கூழையாறு கடற்கரையில் காத்திருப்போர் மண்டபம் அமைக்கப்பட்டு உள்ளது.
கொள்ளிடம்;
கொள்ளிடம் அருகே கூழையாறு கடற்கரையில் காத்திருப்போர் மண்டபம் அமைக்கப்பட்டு உள்ளது.
கூழையாறு கடற்கரை
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே கடலோர கூழையாறு கிராமம் உள்ளது. இங்குள்ள கடற்கரை அழகாகவும், சுகாதாரமாகவும் இருந்து வருகிறது. இந்த கடற்கரையை கூழையாறு மீனவர்கள் மிகவும் சுகாதாரத்துடன் பேணி காத்து வருகின்றனர்.அங்குள்ள மீனவர்கள் கட்டுப்பாட்டின் படி இந்த கடற்கரையில் யாரும் அசுத்தம் செய்யக் கூடாது. குப்பைகளை கொட்ட கூடாது. மீறி அசுத்தம் செய்தால் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று கடந்த ஐந்து வருட காலமாக ஒரு கட்டுப்பாட்டை வைத்து கடற்கரையை பராமரித்து வருகின்றனர். இந்த கடற்கரைக்கு விடுமுறை காலங்களில் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
காத்திருப்போர் மண்டபம்
இங்கு வந்து செல்லும் சுற்றுலா பயணிகளின் நலம் கருதியும், மீனவர்களின் நலன் கருதியும் கூழையாறு கடற்கரைப் பகுதியை மேம்படுத்த வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். கிராம மக்களின் கோரிக்கையை ஏற்று ஒன்றியக்குழு தலைவர் ஜெயபிரகாஷ் நடவடிக்கையின் பேரில் 15- வது மானிய நிதி குழுவில் இருந்து 2021-22-ம் ஆண்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அப்பகுதியின் ஒன்றியக்குழு உறுப்பினர் அங்குதன் தொகுதி மேம்பாட்டு நிதியாக பயன்படுத்தப்பட்டு ரூ. 5 லட்சம் மதிப்பீட்டில் காத்திருப்போர் மண்டபம் கட்டப்பட்டுள்ளது.
மின் விளக்குள்
மேலும் கூழையாறு கடற்கரைக்கு செல்வதற்கு தார் சாலை மேம்படுத்தும் பணியும், மின் கம்பம் புதியதாக அமைத்து மின்விளக்கு பொருத்தி இரவு நேரங்களில் ஒளிர செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் வெளியூர்களில் இருந்து இங்கு வந்து செல்லும் சுற்றுலா பயணிகளும் மீனவ கிராம மக்களுக்கும் பயனுள்ளதாக அமையும்.