< Back
மாநில செய்திகள்
மதுரை
மாநில செய்திகள்
வைகை எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு 45 வயது
|16 Aug 2022 2:57 AM IST
வைகை எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு 45 வயது ஆனதையொட்டி பயணிகள் கேக் வெட்டி கொண்டாடினர்.
மதுரை-சென்னை இடையே பகல் நேரத்தில் இயக்கப்படும் வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் 1977-ம் ஆண்டு ஆகஸ்டு 15-ந்தேதி தனது பயணத்தை ெதாடங்கியது. இந்த ரெயில் இயக்கப்பட்டு நேற்றுடன் 45-வது ஆண்டுகள் ஆகிறது. இதையொட்டி மதுரை ரெயில் நிலையத்தில் பயணிகள் கேக் வெட்டி கொண்டாடினர். ரெயில் பயண விசிறிகள் சார்பில் நடந்த இந்த நிகழ்ச்சியில், ரெயில் என்ஜின் டிரைவர்கள் ரவிசங்கர், கருப்பையா ஆகியோர் கவுரவிக்கபட்டனர்.