< Back
மாநில செய்திகள்
கடலூர்
மாநில செய்திகள்
விருத்தாசலம் போலீஸ் நிலையத்தில் டி.ஐ.ஜி. ஆய்வு
|29 Dec 2022 1:36 AM IST
விருத்தாசலம் போலீஸ் நிலையத்தில் டி.ஐ.ஜி. ஆய்வு செய்தார்.
விருத்தாசலம்,
விருத்தாசலம் போலீஸ் நிலையத்தில் விழுப்புரம் சரக டி.ஐ.ஜி. பாண்டியன் நேரில் ஆய்வு செய்தார். அப்போது அவர் போலீஸ் நிலையத்தில் பராமரிக்கப்படும் பதிவேடுகளை பார்வையிட்டு, நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து விசாரித்து முடிக்க உத்தரவிட்டார். தொடர்ந்து போலீஸ் நிலையத்திலிருந்த போலீசாரிடம் குறைகளை கேட்டறிந்த அவர், வெளியே காத்திருந்த பொது மக்களிடம் போலீஸ் நிலையத்தின் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து அவர்கள் என்ன புகார் சம்பந்தமாக வந்துள்ளனர் எனவும் கேட்டு அவற்றை உடனடியாக விசாரித்து முடிக்கவும் போலீசாருக்கு அறிவுறுத்தினார். அதனை தொடர்ந்து போலீஸ் நிலைய வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்தார். அப்போது விருத்தாசலம் உதவி போலீஸ் போலீஸ் சூப்பிரண்டு அங்கித்ஜெயின், இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் உடனிருந்தனர்.