வி.பி.சிங் வாழ்க்கை வரலாறு தமிழ்நாடு பாடத் திட்டத்தில் சேர்க்கப்பட வேண்டும் - ராமதாஸ்
|வி.பி.சிங் வாழ்க்கை வரலாறு தமிழ்நாடு பாடத் திட்டத்தில் சேர்க்கப்பட வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
சென்னை,
வி.பி.சிங் வாழ்க்கை வரலாறு தமிழ்நாடு பாடத் திட்டத்தில் சேர்க்கப்பட வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-
"மத்திய அரசின் வேலைவாய்ப்புகளில், மண்டல் ஆணையத்தின் பரிந்துரைப்படி பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீடு வழங்கிய சமூகநீதிக்காவலர் வி.பி.சிங்குக்கு சென்னையில் முழு உருவச் சிலை அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருக்கிறார். இது வரவேற்கத்தக்கது!
சமூக நீதியை பாதுகாக்க அவர் செய்த தியாகங்களும், அவர் காட்டிய உறுதிப்பாடும் ஈடு இணையற்றவை. சாமானிய மக்களுக்கு சமூகநீதி கிடைப்பதை உறுதி செய்வதற்காக எதையும் இழப்பேன். பா.ம.கவின் சமுகநீதிக் கொள்கைகளுக்கு துணை நின்றவர். எனது நண்பர். அவரது வாழ்க்கை வரலாறும் தமிழ்நாடு பாடத் திட்டத்தில் சேர்க்கப்பட வேண்டும்!" என்று கூறியுள்ளார்.