< Back
மாநில செய்திகள்
சிவகங்கை
மாநில செய்திகள்
தேசிய வாக்காளர் தின கொண்டாட்டம்
|26 Jan 2023 12:15 AM IST
தேசிய வாக்காளர் தின விழா கொண்டாடப்பட்டது.
காளையார்கோவில்,
காளையார்கோவில் ஒன்றியத்தில் உள்ள கீழக்கோட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தேசிய வாக்காளர் தின விழா கொண்டாடப்பட்டது.தலைமை ஆசிரியை தெய்வானை தலைமை தாங்கினார். வாக்காளர் சேர்ப்பு அலுவலர் ராமதிலகம், வாக்காளர் அறிமுக அலுவலர் சத்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆசிரியை மீனாட்சி வரவேற்றார்.அறிவியல் பட்டதாரி ஆசிரியர் ஆரோக்கியசாமி வாக்காளர்களின் உறுதிமொழி வாசிக்க அனைவரும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். இதைத்தொடா்ந்து மாணவ, மாணவிகளுக்கு மாதிரி தோ்தல் நடத்தப்பட்டது. இதில் அனைத்து மாணவ- மாணவிகளும் வாக்களித்தனா். 18 வயது பூர்த்தி அடைந்தவா்கள் அனைவரும் ஓட்டுரிமையை பெற வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. முடிவில் ஆசிரியை கமலாபாய் நன்றி கூறினார். நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் ராஜபாண்டி, அமலதீபா கலந்து கொண்டனா்.