< Back
மாநில செய்திகள்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் கை சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் - கி.வீரமணி வேண்டுகோள்
மாநில செய்திகள்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் கை சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் - கி.வீரமணி வேண்டுகோள்

தினத்தந்தி
|
10 Feb 2023 9:22 PM IST

2024-ல் நடக்க இருக்கும் நாடாளுமன்ற தேர்தலுக்கு இந்த வெற்றி தொடக்கத்தைக் கொடுப்பதாக இருக்கும் என கூறியுள்ளார்.

சென்னை,

திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ஈரோடு இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிசாமி அணிக்கு இரட்டை இலை கொடுத்து ஆதரவு கொடுப்பதாகக் காட்டிக் கொள்ளும் பாஜகவின் எண்ணமெல்லாம், பெரிய வித்தியாசத்தில் அ.தி.மு.க. வேட்பாளர் தோற்கவேண்டும் என்பதுதான். இரு கோஷ்டிகளும் இணைந்து விட்டன என்ற ஒரு பொதுப் பிம்பத்தை உருவாக்கினால்தான், ஆளுங்கட்சியின் எதிர்ப்பு வாக்குகளின் கண்கள் தன்மீது பாயும் என்ற நரித்தனம் பாஜகவுக்கு இருக்கிறது.

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க.வின் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் சார்பில் பெரியார் குடும்பத்தைச் சேர்ந்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் போட்டியிடுகிறார். இவரைவிட சிறந்த வேட்பாளரை அத்தொகுதியில் கண்டுபிடிக்க இயலாது.

2024-ல் நடக்க இருக்கும் நாடாளுமன்ற தேர்தலுக்கு இந்த வெற்றி தொடக்கத்தைக் கொடுப்பதாக இருக்கும். கரணம் தப்பினால் மரணம் என்பதை ஈரோடு கிழக்குத் தொகுதி மக்களே மறவாதீர். வாக்களிப்பீர் கை சின்னத்திற்கே, அது இக்காலச் சூழலில் நாட்டு மக்களுக்குக் கைகொடுக்கக் கூடியதாகும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்