< Back
மாநில செய்திகள்
தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை பாதுகாப்பு ஏற்பாடுகள்: தலைமை செயலாளர் ஆலோசனை
மாநில செய்திகள்

தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை பாதுகாப்பு ஏற்பாடுகள்: தலைமை செயலாளர் ஆலோசனை

தினத்தந்தி
|
31 May 2024 9:38 PM IST

வாக்கு எண்ணிக்கை பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

சென்னை,

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இதுவரை 6 கட்ட தேர்தல்கள் நடந்து முடிந்துள்ள நிலையில், 7-வது மற்றும் கடைசி கட்ட தேர்தல் நாளை நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூன் 4-ந்தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

இந்த நிலையில் தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் சட்டம்-ஒழுங்கு தொடர்பாக தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா இன்று ஆலோசனை நடத்தினார். சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில், தமிழக டி.ஜி.பி. சங்கர் ஜிவால் உள்ளிட்ட காவல்துறை உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

ஏற்கனவே வாக்கு எண்ணிக்கை மையங்களில் மத்திய பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் நிலையில், வாக்கு எண்ணிக்கையின்போது காவல்துறை சார்பில் கூடுதல் பாதுகாப்பு வழங்குவது குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்