< Back
மாநில செய்திகள்
குல்பி ஐஸ் சாப்பிட்ட 35 சிறுவர்களுக்கு வாந்தி, மயக்கம்
விழுப்புரம்
மாநில செய்திகள்

குல்பி ஐஸ் சாப்பிட்ட 35 சிறுவர்களுக்கு வாந்தி, மயக்கம்

தினத்தந்தி
|
19 Aug 2023 12:41 AM IST

விக்கிரவாண்டி அருகே குல்பி ஐஸ் சாப்பிட்ட 35 சிறுவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.

விக்கிரவாண்டி

விக்கிரவாண்டி ஒன்றியத்துக்குட்பட்ட முட்டத்தூர் கிராமத்தில் நேற்று மாலை மொபட்டில் வந்த நபரிடம் அப்பகுதியை சேர்ந்த சிறுவர், சிறுமிகள் சிலர் குல்பி ஐஸ் வாங்கி சாப்பிட்டனர். பின்னர் இரவு 10 மணியளவில் ஐஸ் சாப்பிட்ட சிறுவர், சிறுமிகளுக்கு திடீரென வாந்தி, மயக்கம், வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. அடுத்தடுத்து ஒவ்வொருவராக மயங்கி விழுந்ததால் அதிர்ச்சி அடைந்த அவர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அவர்களை சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். 3 வயது முதல் 15 வயதுக்குட்பட்ட மொத்தம் 35 சிறுவர், சிறுமிகளுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். குல்பி ஐசில் ஏதேனும் மயக்க மருந்து கலந்து உள்ளதா? அல்லது கெட்டுப்போன ஐசை வாங்கி சாப்பிட்டதால் வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டதா? என்பது குறித்து சுகாதாரத்துறை மற்றும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் சிறுவர், சிறுமிகளுக்கு குல்பி ஐஸ் விற்பனை செய்த மர்ம நபரை விக்கிரவாண்டி போலீசார் தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் முட்டத்தூர் கிராமத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்